
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாட் பௌஸ் - வில் யங் இணை களமிறங்கினர்.
இதில் வில் யங் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் வந்தது முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாட் பௌஸ் அரைசதம் கடந்த நிலையில், 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.