PAK vs NZ, 2nd Test: 409 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; நியூசிலாந்து நிதானம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் பிளெண்டல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் டெவான் கான்வே சதத்தை பதிவுசெய்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 20, கேப்டன் பாபர் ஆசாம் 24 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 83 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் - சர்ஃப்ராஸ் அஹ்மத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் சர்ஃப்ராஸ் அஹ்மத் 78 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சௌத் சகீல் சதாமடித்து அசத்தினார். ஆனால் பின்னர் களமிறங்கிய அகா சல்மான் 41 ரன்களிலும், ஹசன் அலி, மிர் ஹ்ம்சா, நசீம் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்களைச் சேர்த்திருந்தது.
பின்னர் இன்றி தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் சில ஓவரிலேயே பாகிஸ்தான் அணி கடைசி விக்கெட்டையும் இழந்து 409 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் கடைசி வரை களத்தில் இருந்த சௌத் சகீல் 125 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
அதன்பின் 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு அதிர்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் டெவான் கான்வே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்பத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது. டாம் லேதம் 37 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now