
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-2 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று ராவல்பிண்டியிலுள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சாட் பௌஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் கேப்டன் டாம் லேதம் 13 ரன்களிலும், வில் யங் 6 ரன்களிலும், டெரில் மிட்செல் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பௌஸுடன் இணைந்த மார்க் சாப்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.