
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்று மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த உஸ்மான் கான் சிறப்பனா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த பாபர் ஆசாமும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 69 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃபகர் ஸமான் ஒருமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் அதிரடி வீரர் இஃப்திகார் அஹ்மத் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.