Advertisement

பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 17, 2024 • 04:05 PM

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. மேலும்  ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இத்தொடரை பயன்படுத்த உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 17, 2024 • 04:05 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் -  பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 7 மணி(இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • பாகிஸ்தான் - 21
  • நியூசிலாந்து - 17
  • முடிவில்லை - 01

நேரலை

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், ஃபகார் ஸமான், அசாம் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது அமீர், உஸ்மான் கான், நசீம் ஷா

நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிம் சீஃபர்ட், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல் (கே), டாம் ப்ளூன்டெல், ஜிம்மி நீஷம், கோல் மெக்கன்சி, ஜேக்கப் டஃபி, பென் லிஸ்டர், பென் சியர்ஸ், இஷ் சோதி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: டிம் சீஃபர்ட், முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ்: பாபர் அசாம் (கேப்டன்), மார்க் சாப்மேன், ஃபகார் ஜமான், சைம் அயூப் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், ஷதாப் கான்
  • பந்துவீச்சாளர்கள்: முகமது அமீர், நசீன் ஷா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement