
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணி பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தன்ர்.
அந்த அணியின் டார் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய கீமார் ரோச் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டியும் அரைசதம் கடந்து அசத்திய கையோடு 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில்163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது ஹுரைரா 9 ரன்னிலும், அடுத்து வந்த பாபர் ஆசாம் ஒரு ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 15 ரன்னிலும், காம்ரன் குலாம் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சௌத் சகீல் 32 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 49 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.