
Pakistan vs West Indies 2nd Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்தானில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 127 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தன் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
PAK vs WI 2nd Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
- நேரம் - ஜனவரி 25, காலை 10 மணி