பாகிஸ்தான் ஏ vs இந்தியா ஏ - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடவுள்ளது.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த தலைமுறை நட்சத்திர வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளான ஆட்டம் நாளை கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்த போட்டி இந்திய நேரப்ப்டி மதியம் 2 மணி அளவில் தொடங்குகிறது. இந்திய ஏ அணியை பொறுத்தவரை சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா, துருவ் ஜூரல், யாஷ் தூல், ஹங்கர் கேக்கர், நிஷாந்த் சிந்து போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளுமே அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டுமே யுஏஇ மற்றும் நேபாள் ஆகிய பலம் குன்றிய அணிகள் ஆகும்.
Trending
பாகிஸ்தானை பொருத்தவரை நேபாளுக்கு எதிரான ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறியே வெற்றி பெற்றாலும், யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் காசிம் அக்ரம் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோன்று பேட்டிங்கில் ஃபர்கான், கம்ரான் குலாம், முகமது ஹாரிஸ் போன்ற வீரர்கள் எல்லாம் நன்றாகவே விளையாடி வருகிறார்கள். மேலும் சர்வதேச போட்டியில் விளையாடிய சஹானாவாஸ் தஹானியும் இந்த தொடரில் இடம் பெற்றிருக்கிறார். இதனால் பலம் வாய்ந்த இரண்டு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது. மேலும் ஓ டி டியில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். நாளை கொழும்புவில் உள்ள ஆடுகளமும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும் என கணிக்கப்படுள்ளது. அடுத்த தலைமுறை வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகப் பெரிய வாய்ப்பாக அவர்களுக்கு அமையும்.
உத்தேச லெவன்
இந்தியா: சாய் சுதர்ஷன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல் (கே), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, துருவ் ஜூரல், மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, ராஜ்வர்தன் ஹாங்கர்கேகர்.
பாகிஸ்தான்: சாம் அய்யூப், தயப் தாஹிர், முகமது ஹாரிஸ் (கே), கம்ரான் குலாம், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஒமைர் யூசுப், காசிம் அக்ரம், முகமது வாசிம் ஜூனியர், அர்ஷத் இக்பால், ஷாநவாஸ் தானி, சுஃபியான் முகிம்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - துருவ் ஜூரல், முகமது ஹாரிஸ்
- பேட்ஸ்மேன்கள் - சாம் அயூப், சாய் சுதர்ஷன், யாஷ் துல்
- ஆல்-ரவுண்டர்கள் - அபிஷேக் சர்மா (கேப்டன்), காசிம் அக்ரம்
- பந்துவீச்சாளர்கள் - ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், முகமது வாசிம், ஷாநவாஸ் தானி, ஹர்ஷித் ராணா (துணை கேப்டன்)
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now