
Pakistan all-rounder Mohammad Nawaz tests positive for COVID-19 ahead of New Zealand series (Image Source: Google)
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் இத்தொடருக்கான பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள முகமது நவாஸிற்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. இதையடுத்து முகமது நவாஸ் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.