
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபகாலமாகவே டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆனால் அதனைத் தவிர்த்து இந்த ஆண்டு முழுவதுமே டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒரு அணியாக பாகிஸ்தானில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.