Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 16, 2023 • 11:46 AM

வரும் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 16, 2023 • 11:46 AM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐசிசி பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Trending

கடந்த 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அத்தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. இதனால் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement