
Pakistan Cricketers To Be In 5-Day Quarantine Before England Tour (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஜூலை 8 ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிகப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூன் 25ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஜூன் 20ஆம் தேதி முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய விடுதிகளில் கடுமையான தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்படுவர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.