-mdl.jpg)
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, அசாத்தியமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பங்களித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பேற்று முதல் முறையாக விளையாடி கோப்பையை வென்று தந்ததிலிருந்து, அவருக்கு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரில் மொத்தமாக 50 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார். பந்துவீச்சிலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்கள் விலாசி அசத்தினார். தொடர்ச்சியாக முக்கியமான போட்டிகளில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரை ஒப்பிட்டு பேசி பாகிஸ்தான் அணியில் ஹர்திக் போன்ற ஒரு ஃபினிஷர் இல்லை என்று சாகித் அப்ரிடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணியில் சதாப் கான், நவாஸ் போன்று தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல பங்களிப்பை கொடுத்து வரும் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லை என்று தனது கருத்தில் சாகித் அப்ரிடி குறிப்பிட்டு பேசினார்.