
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செமி ஃபைனலுக்கு சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால் அரையிறுதிக்கு சென்று இறுதி 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதே போல தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் 2, 3ஆவது இடத்தைப் பிடித்து அசத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா தோல்வியில் இருந்து கம்பேக் கொடுத்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 2 வெற்றியும் 3 தோல்வியும் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏனெனில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்த நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் வரலாற்றில் 8வது முறையாக உலகக் கோப்பையில் தோற்று ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்தது. அதை விட கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தடுமாறி வருகிறது.