
பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது.
இந்த தொடரில் வெற்றி பெற்றதால் டி20 உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த அணியின் அதிரடி வீரரான ஆசிஃப் அலி காலில் ஏற்பட்டுள்ளதால் பெரும் பின்னடைவு உருவாகியுள்ளது. நியூசிலாந்துடனான இறுதிப்போட்டியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூசிலாந்து இன்னிங்ஸில், முகமது வாசிம் வீசிய பந்தை கான்வே பவுண்டரிக்கு அடிக்க, அதனை தடுக்க முயன்ற போது, ஆசிப் அலி டைவ் அடித்து கீழே விழுந்தார். வேகமாக சென்றதால் கால் மூட்டு பகுதி தரையில் வேகமாக உராசியது. இதனால் காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவக்குழு அழைத்து சென்றனர். இதன்பின்னர் போட்டி முழுவதும் அவர் வரவே இல்லை.