Advertisement

இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை - வகார் யூனிஸ்!

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி  என பாகிஸ்தான் முன்னாள் வீரர்  வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை - வகார் யூனிஸ்!
இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை - வகார் யூனிஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 28, 2023 • 10:39 PM

நடக்க இருக்கின்ற உலகக் கோப்பை தொடரில் வழக்கம் போல இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு எதிர்பார்ப்பு மிக எக்கச்சக்கமாக இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கான தேதிகள் முதலில் அறிவிக்கப்பட்ட பொழுது அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 28, 2023 • 10:39 PM

பின்னர் குஜராத்தில் நவராத்திரி திருவிழா துவங்குகின்ற காரணத்தினால் அந்த குறிப்பிட்ட நாளில் பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்று, அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகப் போட்டி மாற்றப்பட்டது.

Trending

மேலும் இந்திய அணி ஆசிய கோப்பையில் இந்த முறை பாகிஸ்தான அணியை 228 ரன்கள் என்கின்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி படுதோல்வியை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை  விட இந்தியா வலிமையான அணி என பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளதுள்ளார். 

இதுகுறித்து பேசிய வகார் யூனிஸ், “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மிகப் பெரிய ஆட்டம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மற்ற போட்டிகளைக் காட்டிலும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.  அகமதாபாத்தில் விளையாடும்போது இரண்டு அணிகளுக்குமே அழுத்தம் என்பது இருக்கும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை. 

அகமதாபாத்தில் ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் அவர்களுக்கு மத்தியில்  விளையாடுவது இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளுக்குமே அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அணியின் செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் நிச்சயமாக பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. நசீம் ஷா இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பெரிய இழப்பு. ஹாசன் அலி மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அனுபவம் நிறைந்தவர் என்றாலும் திடீரென சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவருக்கு எளிதானதாக இருக்கப் போவதில்லை” என்று தேரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement