
Pakistan Looking Forward To England, West Indies Tours To Prepare For T20 WC, Says Misbah-Ul-Haq (Image Source: Google)
நடப்பாண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாபர் அசாம் தலமையிலான பகிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியுன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற ஜூன் 29ஆம் தேதி பாகிஸ்தான் அணி தனி விமானம் மூலம் இங்கிலாந்து பயணிக்கவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர்களின் மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.