
இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என இந்தியா அறிவித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தாங்கள் வரப்போவதில்லை என பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
இதையடுத்து இரு நாட்டுக்கும் இடையேயான கிரிக்கெட் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அணி ஒரு திட்டத்தை வகுத்தது. அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. முதலில் இந்த பிளானுக்கு தலையாட்டிய பிசிசிஐ பிறகு பின் வாங்கியது. மேலும் பாகிஸ்தானில் இந்தத் தொடரை நடத்தக்கூடாது என்றும் பிசிசிஐ போர் கொடி தூக்கியது.
இந்த நிலையில் இந்த பிரச்சினை மேலும் சிக்கல் ஆகும் விதமாக பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் நிராகரித்துள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்துவது சரிவராது என்றும் அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றும் முடிவு தான் எடுக்கப்படும் என தெரிகிறது.