
Pakistan name squads for England and West Indies tours (Image Source: Google)
பாகிஸ்தான் அணி வருகிற ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒரு டெஸ்ட், 7 டி20 போட்டிகள் அடங்கிய தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக பாபர் அசாம்மும், துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளர். மேலும் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.