Advertisement

சென்னையில் எங்களுக்கு போட்டி வேண்டாம்: அடம்பிடிக்கும் பாகிஸ்தான்!

உலககோப்பையில் பங்கேற்கத் தயார். ஆனால் போட்டிகளை நாங்கள் சொல்லும் மைதானங்களில் வைக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement
Pakistan Reportedly Requests Venue Swap For Match Against Afghanistan in ICC ODI World Cup 2023!
Pakistan Reportedly Requests Venue Swap For Match Against Afghanistan in ICC ODI World Cup 2023! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 17, 2023 • 10:38 PM

நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக பிசிசிஐ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. ஏற்கனவே எட்டு அணிகள் உறுதி ஆகிவிட்ட நிலையில், மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 17, 2023 • 10:38 PM

இந்தியாவில் மொத்தம் 11 மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாக 11 மைதானங்களும் சீரமைப்பு செய்யப்பட்டு இப்போதே பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலக கோப்பையில் விளையாட மாட்டோம். ஏனெனில் இந்திய அணி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு சென்று விளையாட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது. அதன் காரணமாக பாகிஸ்தான் இப்படி முரண்டு பிடித்து வந்தது.

Trending

பின்னர் இந்தியாவிற்கு வந்து விளையாடுவதற்கு தயார். ஆனால் நாங்கள் கேட்கும் மைதானங்களில் அனுமதி கொடுக்க வேண்டும். தங்களுக்கான உலகக்கோப்பை போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தக்கூடாது. மற்ற இடங்களில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். முன்னர் அகமதாபாத் மைதானத்தில் விளையாடமாட்டோம் என சொன்ன பாகிஸ்தான் அணி, தற்போது சென்னை மைதானங்களில் விளையாட மாட்டோம் என்று அடம் பிடித்து வருகிறது.

அரசியல் காரணங்களுக்காக அகமதாபாத்தில் விளையாட மாட்டோம் என்று கூறியிருந்தாலும், சென்னை மைதானத்தில் விளையாட மாட்டோம் என்று கூறியிருப்பது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் சென்னை மைதானம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் . ஆகையால் போட்டியை பெங்களூருக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள்ள மாறியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement