கோலி, ரோஹித்தின் சாதனைகளை தகர்த்த பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது .
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது . துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட் இருக்கு 99 ரன்கள் சேர்த்தனர் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த ரிஸ்வான் ஆட்டம் இழந்தார் . கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பாபர் ஆசாம் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி t20 சர்வதேச போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தையும், டி20 போட்டிகளில் தனது ஒன்பதாவது சத்தத்தையும் நிறைவு செய்தார் .
Trending
இவரது மிகச் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 192 கண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது . 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது . இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 போட்டியிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவியது . மிகச் சிறப்பாக பந்து வீசிய ஹாரிஸ் ரவுப் 27 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இந்தப் போட்டியில் சதம் எடுத்ததன் மூலம் பல சாதனைகளை முறியடித்திருக்கிறார் பாபர் அசாம் . இந்தப் போட்டியில் அவர் எடுத்தது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது சதமாகும் . இதன் மூலம் சர்வதேச டி20 கேப்டனாக அதிக சதம் எடுத்தவர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம் . ரோஹித் சர்மா நான்கு டி20 சர்வதேச சதங்களை எடுத்திருந்தாலும் கேப்டனாக இரண்டு டி20 சதங்களை எடுத்து இருக்கிறார் .
இந்த சதத்துடன் மொத்தமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பது சதங்களை எடுத்திருக்கிறார் பாபர் ஆசாம் . இதன் மூலம் கிரிஷ் கெயில்லுக்கு அடுத்தபடியாக அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பாபர் அசாம். மேலும் கேப்டனாக பாபர் அசாம் எடுக்கும் ஆறாவது சதம் இதுவாகும் .
இதன் மூலம் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரின் சாதனைகளை முறியடித்திருக்கிறார். ஃபாஃப் மற்றும் விராட் கோலி ஐபிஎல் டி20 கிரிக்கெட் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட் உள்நாட்டு டி20 கிரிக்கெட் என மொத்தமாக எல்லா டி 20களிலும் சேர்த்து கேப்டனாக ஐந்து சதங்களை எடுத்துள்ளனர். ஆனால் பாபர் அசாம் ஆறு சதங்களை எடுத்து இவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now