
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் தற்போதிலிருந்தே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் நியூசிலாந்து அணியும் இத்தொடருக்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை எட்ட வாய்ப்புள்ளது.