Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹாரிஸ் ராவூஃப்!

மெல்போர்ன் எனது ஹோம் கிரவுண்ட் எனவும், அங்கு என்னால் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச முடியும் எனவும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃப் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 29, 2022 • 17:09 PM
Pakistan speedster's fierce warning to Team India ahead of T20 World Cup clash
Pakistan speedster's fierce warning to Team India ahead of T20 World Cup clash (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக இருப்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பது உறுதி.

Trending


ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர்  23ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது. இந்த ஆண்டின் இந்தியா - பாகிஸ்தான் 3ஆவது முறையாக மோதுகிறது. ஆசிய கோப்பையில் 2 முறை இந்தியா - பாகிஸ்தான் மோதின. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. 

டி20 உலக கோப்பையில் இந்த ஆண்டில் 3ஆவது முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி அதன் முதல் போட்டியில் பாகிஸ்தானைத்தான் எதிர்கொண்டது. ஆனால் அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானை பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் மெல்போர்னில் மோதவுள்ள நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃப், இந்திய அணியை எச்சரித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய அவர், “இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே உயர் அழுத்தமான போட்டி. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் நான் அதிக அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆடியபோது அவ்வளவு அழுத்தமாக இல்லை. என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்.

நான் எனது சிறப்பான பவுலிங்கை வீசினால் இந்திய வீரர்களால் எனது பவுலிங்கை எளிதாக எதிர்கொள்ளமுடியாது. டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மெல்போர்னில் நடக்கிறது. மெல்போர்ன் எனது ஹோம் கிரவுண்ட். பிபிஎல்லில் நான் மெல்போர்ன் ஸ்டார்ஸுக்காக ஆடுகிறேன். அதனால் மெல்போர்ன் ஆடுகளமும் கண்டிஷனும் எனக்கு நன்கு பழக்கப்பட்டது. இந்தியாவிற்கு எதிரான எனது திட்டங்களை இப்போதே வகுக்க தொடங்கிவிட்டேன்” என்று எச்சரித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement