
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஒன்றில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள அணிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அதற்கேற்றது போல் நாளை நடைபெறும் போட்டிகளின் முடிவைக் கொண்டு எந்த இரண்டு அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெரிந்துவிடும்.
அதன்படி அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கும் நடைபெறும் வாழ்வா சாவா போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளின் போட்டி முடிவுகளுக்கு ஏற்றவகையில் அரையிறுதிச்சுற்றுக்கான ஒரு வாய்ப்பு உள்ளது.