பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
- இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
- நேரம் - காலை 10.30 மணி
போட்டி முன்னோட்டம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியுள்ளது. அதிலும் அந்த அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் செயல்பட்ட விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து டி20 ஆட்டத்தில் விளையாடியது போன்று ரன்களைக் குவித்து தள்ளியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி, பென் டங்கெட், ஹாரி ப்ரூக், ஒல்லி போப் என வந்தவர்கள் எல்லாம் சதம் விளாசி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதறவிட்டனர்.
இதனால் இப்போட்டியிலும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காயம் காரணமாக அறிமுக டெஸ்டில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளதால், அவருக்கு மாற்றாக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் இங்கிலாந்து அணி மீது உள்ளது.
மறுபக்கம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சொதப்பியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனெனில் உலககின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளதாக கூறும் அந்த அணியால், முதல் நாளில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் தடுமாறியது பெரும் விமர்சனங்களுக்கு வித்தித்திட்டது.
அதேபோல் மைதானத்தின் தன்மையும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ராவூஃபும் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 87
- பாகிஸ்தான் - 21
- இங்கிலாந்து - 27
- முடிவில்லை - 39
உத்தேச லெவன்
பாகிஸ்தான் - அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், அசார் அலி, பாபர் அசாம் (கே), சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், நசீம் ஷா, முகமது வாசிம் ஜூனியர், முகமது அலி, ஜாஹித் மஹ்மூத்.
இங்கிலாந்து - ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ்/கீட்டன் ஜென்னிங்ஸ், வில் ஜாக்ஸ், ஜாக் லீச், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - பென் டக்கெட், ஒல்லி போப்
- பேட்டர்ஸ் – ஜோ ரூட், பாபர் அசாம், இமாம் உல் ஹக், ஹாரி புரூக்
- ஆல்-ரவுண்டர்கள் - வில் ஜாக்ஸ்
- பந்துவீச்சாளர்கள் - ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன், நசீம் ஷா, ஜாஹித் மஹ்மூத்.
Win Big, Make Your Cricket Tales Now