Advertisement
Advertisement
Advertisement

PAK vs NZ, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 16, 2021 • 13:17 PM
Pakistan vs New Zealand, 1st ODI – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Pakistan vs New Zealand, 1st ODI – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 

18 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • நேரம் : மதியம் 2.30 மணி
  • இடம்: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்

போட்டி முன்னோட்டம்

பாபர் ஆசம் தலைமையிலான் பாகிஸ்தான் அணி இமாம் உல் ஹக், ஃபகர் ஸமான், முகமது ரிஸ்வான், குஷ்டில் ஷா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஃபாமில் உள்ளனர். 

அதேபோல் பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் ஷாஹின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருடன் சதாப் கான் இடம்பிடித்துள்ளது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் அதேசமயம் டாம் லேதம் தலைமையிலான அனுபவமில்ல நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

ஏனெனில் ரச்சின் ரவீந்திரா, ஃபின் ஆலன், வில் யங் போன்ற இளம் வீரர்கள் தங்கள் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் பிரேஸ்வெல், ஆஜஸ் படேல் இருப்பது அணிக்கு சற்று பலமாக கருதப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 107
  • பாகிஸ்தான் - 55
  • நியூசிலாந்து - 48
  • முடிவில்லை - 4

உத்தேச அணி

பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், ஃபகார் ஸமான், பாபர் ஆசம் (கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், குஷ்டில் ஷா, சதாப் கான், ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.

நியூசிலாந்து: ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லேதம்(கே), காலின் டி கிராண்ட்ஹோம், ஹென்றி நிக்கோலஸ், கோல் மெக்கோன்சி, ஸ்காட் குகலீன், அஜாஸ் பட்டேல், மேட் ஹென்றி, டக் பிரேஸ்வெல்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டாம் லேதம், முகமது ரிஸ்வான்
  • மட்டைகள் - வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், பாபர் ஆசம்
  • ஆல் -ரவுண்டர்கள் - ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கோன்சி, சதாப் கான்
  • பந்துவீச்சாளர்கள் - மேட் ஹென்றி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement