
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதற்கிடையில், அரையிறுதிப்போட்டியில் குரூப் இரண்டிலிருக்கும் பாகிஸ்தான் அணி, குருப் ஒன்றில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையான இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த உலக கோப்பையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் இந்தியா - ஜிம்பாப்வேவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்திடம் அடைந்த அதிர்ச்சி தோல்வியின் காரணமாக கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு முன்னேறியது.