PAK vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
Trending
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பது குறித்த முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை பலபரீட்சை நடத்துகின்றன. அதன்படி கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இலங்கை
- இடம் - ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
- நேரம் - மாலை 3 மணி
மைதானம்
இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும், அதே சமயம் பேட்ஸ்மேன்கள் களத்தில் நேரத்தை செலவிட்ட பிறகு பெரிய ரன்களை எடுக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே எதிரணி அணிக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மொத்தம் – 155
- பாகிஸ்தான் - 92
- இலங்கை - 58
- முடிவில்லை - 04
- டை - 01
உத்தெச லெவன்
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): ஃபகார் ஸமான், இமாம்- உல்- ஹக், பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சௌத் சகீல், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசீம் ஜூனியர், ஸமான் கான்.
இலங்கை - பதும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அஷலங்கா, தனஞ்சய் டி சில்வா, தசூன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, மகேஷ் திக்ஷன, கசூன் ரஜிதா, மதிஷா பதிரானா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
- பேட்ஸ்மேன்கள்- பாபர் ஆசாம் (கேப்டன்), இமாம் உல் ஹக், இஃப்திகார் அகமது, சரித் அஷலங்கா
- ஆல்ரவுண்டர்கள் - தனஞ்சய் டி சில்வா, ஷதாப் கான், துனித் வெல்லாலகே (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்- ஷாஹீன் ஷா அஃப்ரிடி, மகேஷ் தீக்ஷனா, முகமது வாசிம் ஜூனியர்.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now