உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியானது அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் விளையாட்டுப் பொறுப்பாளர் எஹ்சான் மசாரி, இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு வலுவான நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே இந்தியா தனது ஆசியக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் விளையாட விரும்பினால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கும் இதையே நாங்கள் கோருவோம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அமைக்கும் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை தாங்குவார், அதில் நான் உட்பட 11 அமைச்சர்கள் அங்கம் வகிப்பார்கள். நாங்கள் அனைத்து விஷயங்களையும் ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கும் பிரதமருக்கு எங்களது ஆலோசனைகளை வழங்குவோம். பாகிஸ்தானில் விதிகளின்படி நடைபெறவிருந்த ஆசியக் கோப்பை போட்டியின் இடம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.