ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் குரூப்-2 விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
வழக்கம் போல் இல்லாமல் இம்முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அசுர பலத்துடன் பாகிஸ்தான் அணி திகழ்கிறது. அதனால் இம்முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு உள்ள அணியாகவும் பாகிஸ்தான் அணி பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நேற்று நடைபெற்ற நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு முக்கியமான சாதனையை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.