
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தற்போது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.