
Pakistan's Shadab Khan picks Team India star in response to 'most difficult batsman to bowl' (Image Source: Google)
பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான ஷதாப் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி, மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தான் அறிமுகமான சமயத்திலிருந்தே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட், 48 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் கேப்டனாகவும் தலைமை தாங்கி வருகிறார்.