Advertisement

சஹாவை புகழ்ந்த சல்மான் பட்; காரணம் இதுதான்!

சக வீரர் தான் சிறந்தவர் என்ற சஹாவின் கூற்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 23, 2021 • 20:36 PM
Pak's Salman Butt Hails Wriddhiman Saha, Says 'Reflection Of The True Professionalism In The Indian
Pak's Salman Butt Hails Wriddhiman Saha, Says 'Reflection Of The True Professionalism In The Indian (Image Source: Google)
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக வரும் ஜூன் 2ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், விருத்திமான் சஹா இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் யார் அணியில் இடம் பெறுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் தோன்றியது. 

Trending


இந்நிலையில் தான் விருத்திமான் சஹா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரிஷப் பந்த்திற்கே அணியில் இடம்கிடைக்கும் என தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து பேசிய சாஹா,‘ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபில் சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். நல்ல ஃபார்மில் உள்ளார். எனவே அவர் தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பருக்கு முதல் தேர்வாக இருப்பார். நான் எனக்கான வாய்ப்புகாக காத்திருப்பேன். அப்படி ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அந்த ஒரு வாய்ப்புகாக தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்’ என்று தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆல்தினார்.

இந்நிலையில் சாஹாவின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சல்மான் பட்,“சக வீரர் தான் சிறப்பாக ஆடுகிறார். அவருக்குதான் வாய்ப்பு எனக் கூறுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. தொழிலுக்கு நேர்மையானவரால் மட்டும்தான் இப்படி கூற முடியும். சாஹாவை பாராட்டியே ஆக வேண்டும். ஐபிஎல் முதல் சீசனில் நானும், சாஹாவும் கொல்கத்தா அணிக்காக சேர்ந்து விளையாடியுள்ளோம். அவர் மிகவும் நேர்மையான மனிதர். மிகவும் எளிமையானவர் என்று பாராட்டியுள்ளார். 

மேலும் சக வீரர் தான் சிறந்தவர் என்ற சஹாவின் கூற்று ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement