
PAKW vs WIW, 2nd ODI: ஸ்டாஃபானி டெய்லர், காம்பெல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்! (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்றும் வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் முனீபா அலி 2 ரன்களுக்கு விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அமீன் - மரூஃப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 50 ரன்களில் அமீனும், 65 ரன்களில் மரூஃபும் தங்கள் விக்கெட்டை இழந்தனர்.