Advertisement

ENG vs IND, 5th Test: ரிஷப் பந்த், ஜடேஜா அதிரடியில் வலிமையான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement
Pant's Ton & Jadeja's Unbeaten Knock Puts India Ahead Against England; Score 338/3 At Stumps On Day
Pant's Ton & Jadeja's Unbeaten Knock Puts India Ahead Against England; Score 338/3 At Stumps On Day (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 02, 2022 • 12:03 AM

இந்தியா, இங்கிலாந்து இடையில் கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்து, இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்து நிலையில், கடைசிப் போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 02, 2022 • 12:03 AM

அந்த எஞ்சிய போட்டி இன்று எட்ஜ்பஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரோஹித் ஷர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Trending

முதலில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் முதல் வரிசை பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஓபனர்கள் ஷுப்மன் கில் 17 (24), புஜாரா 13 (46) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹனுமா விஹாரியும் 20 (53) சொதப்பலாக விளையாடி நடையைக் கட்டினார்.

இந்நிலையில் விராட் கோலி 11 (19), ஷ்ரேயஸ் ஐயர் 15 (11) ஆகியோரும் ஏமாற்றியதால் ரசிகர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தனர். இந்தியாவும் 98/5 எனத் திணறியது.

அந்த சமயத்தில் ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகிய இடது கை பேட்டர்கள் பார்டனர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். இருவரும் அடிக்கடி ரன் அடித்ததால், இந்தியாவின் ஸ்கோர் தொடர்ந்து உயர ஆரம்பித்தது. இந்த பார்ட்னர்ஷுப்பும் 100+ ரன்களை கடந்தது.

இறுதியில் ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், இந்திய அணிக்காக வெளிநாட்டு மண்ணில் அதிக சதம் (4) அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் படைத்தார். இதற்குமுன் விஜய் மஞ்சுரேக்கர், அஜஸ் ரட்ரா, விருத்திமான் சாஹா ஆகியோர் தலா மூன்று சதங்களை அடித்திருந்தார்கள்.

ரிஷப் சதம் அடித்ததை தொடர்ந்து ஜடேஜாவும் அரை சதம் கடந்தார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 146 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த ஷர்துல் தாக்கூர் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 83 ரன்களுடனும், முகமது ஷமி ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மாட்டி பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement