
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு நடைபெற்ற மகளிர் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறி இருந்தார். மேலும், இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்டை எதிர்த்து வினேஷ் போகத் இன்று விளையாட இருந்தார்.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் எடை கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வினேஷ் போகத் மற்றும் இந்தியாவின் பதக்க கனவானது தகர்ந்துள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து அவர்கள் கால அவகாசம் எடுத்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “வினேஷ் போகத்திற்கு நடந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. ஒருவேளை அவர் இப்போட்டியில் விளையாடி இருந்தால் நாங்கள் நிச்சயம் தங்கப்பதக்கத்தை வென்றிருப்போம். ஆனால் விதிகள் என்பது அனைவருக்கும் போதுவானது. அதனால் எங்களால் எதும் செய்ய முடியாது. அதேசமயம் ஒரு வீரர் இறுதிப்போட்டியில் விளையாட மிக அருகில் இருக்கும் போது, இதுபோன்ற தீர்ப்பை வழங்க போட்டி அமைப்பாளர்கள் கூடுதல் நேரம் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.