உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதில் சிட்னியில் நடைபெற்ற தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியது.
Trending
அதில் ரிஷப் பந்த் 61 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுக்ளை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதுடன், 162 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன் மூலம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது 10 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட பாட் கம்மின்ஸ் 5 போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 159 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் இத்தொடரின் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அந்தவகையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். இது தவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் பாட் கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார். அதன்படி இதில் அவர், 47 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 9 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்க
- பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 200 விக்கெட்டுகள் (47 போட்டிகள்)
- நாதன் லையன் (ஆஸ்திரேலியா) - 196 விக்கெட்டுகள் (48 போட்டிகள்)
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 195 விக்கெட்டுகள் (41 போட்டிகள்)
- மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 165 விக்கெட்டுகள் (43 போட்டிகள்)
- ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 156 விக்கெட்டுகள் (35 போட்டிகள்)
Win Big, Make Your Cricket Tales Now