Advertisement

ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போட்டிக்கு பிறகு 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 19, 2023 • 14:30 PM
ஐபிஎல் தொடரில் புதிய  வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த ஏலத்தில் அதிகமான விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி 2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பின்வாங்கியது. ஆனால் 8 கோடியை நெருங்கியதும் சிஎஸ்கே அதிலிருந்து பின் வாங்கியது.

Trending


பின் பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. பாட் கம்மின்ஸின் விலை 20 கோடிக்கு மேல் சென்றதால் பெங்களூர் அணி பின்வாங்கியது, இதன் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாய்க்கு பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்துள்ளது.

பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதன் மூலம் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement