WTC Final: பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பேட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

WTC Final: பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பேட் கம்மின்ஸ்! (Image Source: Google)
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். அவர் 2023-25 சுழற்சியில் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அதில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தி சத்தியுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 17 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் 73 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
WTC 2023-25 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
- ஜஸ்பிரித் பும்ரா - 15 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் 77 விக்கெட்டுகள்
- பேட் கம்மின்ஸ் - 17 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் 73 விக்கெட்டுகள்
- மிட்செல் ஸ்டார்க் - 18 போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் 72 விக்கெட்டுகள்
- நாதன் லையன்- 16 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் 66 விக்கெட்டுகள்
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News