
Pat Cummins Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதான் மூலம் ரிச்சி பெனாட்டின் 62 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்180 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 190 ரன்களில் ஆல் அவுட்டானது. இருப்பினும் அந்த அணி 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 10 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது.