Advertisement

பாட் கம்மின்ஸ் உத்வேகமிக்க வீரர் - இயன் சேப்பல் பாராட்டு!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 03, 2023 • 17:51 PM
பாட் கம்மின்ஸ் உத்வேகமிக்க வீரர் - இயன் சேப்பல் பாராட்டு!
பாட் கம்மின்ஸ் உத்வேகமிக்க வீரர் - இயன் சேப்பல் பாராட்டு! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் சிறப்பாக வழிநடத்தினார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணி 6-வது முறை கோப்பை வெல்ல வெற்றிகரமாக அணியை வழிநடத்திய கம்மின்ஸுக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Trending


இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலிய அணி 6ஆவது உலகக் கோப்பையை வென்றுள்ளது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். 

அவர் எப்போதும் சிறந்த கேப்டனாக இருக்கப் போகிறார். அவர் ஆஸ்திரேலிய அணியின் மிகவும் உத்வேகமான வீரர். கிரிக்கெட் குறித்த பொதுவான அறிவு அவருக்கு சிறப்பாக உள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவர் கம்மின்ஸைப் பார்த்து உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என்றே அர்த்தம்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement