
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியை திறம்பட வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்ல உதவிய டிராவிஸ் ஹெட், உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இதில் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வென்றுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப், இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடர், இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்ததன் விளைவாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Pat Cummin's Mother Would Be Proud Of Him!#CricketTwitter #Australia #PatCummins #Cricket #worldcup2023 pic.twitter.com/VLLQhoF7Fy
— CRICKETNMORE (@cricketnmore) January 25, 2024