
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடைபெறவுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா உடல்நலக் குறைவு காரணமாக ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பதும் நிஷங்கா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதால் ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகுவதாகும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் ஷெவோன் டேனியல் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.