
Patriots' Mikyle Louis Out Of CPL 2021 For Breaching Bio Bubble (Image Source: Google)
சிபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லீக் போட்டிகளிலேயே ரசிகர்களில் எதிர்பார்ப்பை இத்தொடர் நிறைவேற்றி வருவதால், நாளுக்கு நாள் இத்தொடரின் மீதான விறுவிறுப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சிபிஎல் தொடரின் கரோனா பாதுகாப்பு சூழலை அனுமதியின்றி மீறியதாக செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் மைக்கேல் லூயிஸ், தொடரிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் லூயிஸ், தனது நண்பர் குறித்து வந்த சோகமான செய்தியைக் கேட்டதும், எந்தவித அனுமதியும் இன்றி சிபிஎல் தொடரின் பயோ பபுள் விதியை மீறி விடுதியிலிருந்து வெளியேறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.