
PBKS announce Aiden Markram as left-hander's replacement (Image Source: Google)
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகின்றன. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது சில அணிகளுக்கு பாதிப்பாக அமையும். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினர்.
எனவே அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸையும், இங்கிலாந்தின் ஆதில் ரஷீத்தையும் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளர்.