பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்விகு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Trending
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்த நிலையில், கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் படுதோல்வியைச் சந்தித்தது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முழுவதுமாக சோபிக்க தவறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், பிரியன்ஸ் ஆர்யா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் ஃபார்முக்கு திரும்புவார்களாக என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பந்துவீச்சு துறையை அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோருடன் லோக்கி ஃபெர்குசன், மார்கோ ஜான்சன் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியை தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்றாக இருக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹல் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், சுயான்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி, அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்துள்ளது. அணியின் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாலும், மற்ற வீரர்களிடமிருந்து பெரிதளவில் ரன்கள் வரவில்லை. கடந்த போட்டியில் விஜய் சங்கர், எம் எஸ் தோனியைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத்தவறினர். இதனால் இன்றைய போட்டியிலும் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் நூர் அஹ்மத், மதீஷா பதிரானா, கலீல் அஹ்மத் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சொந்த மண்ணிலேயே சென்னை அணி தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், இன்று எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நுரம் அகமது, கலீல் அகமது, மதிஷா பத்திரனா.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 30
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 16
- பஞ்சாப் கிங்ஸ் – 14
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - டெவன் கான்வே, பிரப்சிம்ரன் சிங்
- பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட், நேஹல் வதேரா
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல்
- பந்து வீச்சாளர்கள் - லோக்கி ஃபெர்குசன், கலீல் அகமது, அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now