
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஷும்பன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் குஜராத் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்