Advertisement

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!

பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 21, 2024 • 16:54 PM
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஷும்பன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் குஜராத் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

Trending


பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் அந்த அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது. ஷிகர் தவான் காயத்தால் விளையாடமல் இருப்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது.

அதேசமயம் லியாம் லிவிங்ஸ்டன், பிரப்சிம்ரான சிங், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொதப்பி வருகின்ன்றனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் இருக்கும் ஷஷாங் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோர் தான் பஞ்சாப் பேட்டிங்கின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலித்து வருவதுடன், அணியையும் கரை சேர்த்து வருகின்றனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பஞ்சாப்பின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: சாம் கரண் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ரைலீ ரூஸோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் தொடரில் கணிக்கமுடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடையாக அந்த அணி விளையாடிய போட்டியில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் அணியின் பேட்டிங் வரிசை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோல் முக்கிய பேட்ஸ்மேன்களான சாய் சுதர்சன், டேவிட் மில்லர் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

பந்துவீச்சை பொறுத்தவரை ரஷித் கான், நூர் அஹ்மத், மோஹித் சர்மா போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ரன்களை வாரி வழங்கிவருகின்றனர். இதில் கடைசியாக அந்த அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த சந்தீப் வாரியர் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் அவரது ஓவர்களிலும் ரன்களை கொடுத்தார் என்பதை மறுக்க முடியாது. இதனால் அந்த அணி தங்களது தவறுகளை திருத்தி விளையாடினால் மட்டுமே வெற்றியை ஈட்டமுடியும்.

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement