Advertisement

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 15, 2025 • 12:37 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 15, 2025 • 12:37 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேகேஆர் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியாது தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Also Read

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கந்த போட்டியில் அந்த அணி 246 ரன்களை குவித்திருந்த நிலையிலும் சன்ரைசர்ச் ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்த முடியாமல் படு தோல்வியைத் தழுவியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பஞ்சாப்பிட எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், பந்துவீச்சு தற்போது பெரும் கவலையாக மாறியுள்ளது. இதற்கிடையில் பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு பெரும் பிரச்சையாக உருவாகியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைஷாக் விஜய்குமார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிவுள்ள 6 போட்டிகளில் தலா மூன்று வெற்றி மற்றும் மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு கடந்த போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் சுனில் நரைன், அஜிங்கியா ரஹானே, ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

அவர்களுடன் பந்துவீச்சில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். இதனால் இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் சரியாக செயல்படும் பட்சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை தடுப்பது எளிதல்ல. மேற்கொண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ரன்கள் குவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, இந்த போட்டியிலும் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 33
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 21
  • பஞ்சாப் கிங்ஸ் – 12

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- குயின்டன் டி காக், பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, பிரியன்ஸ் ஆர்யா
  • ஆல்ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement