Advertisement

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன!

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதில் காண்போம்.

Advertisement
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2024 • 02:51 PM

 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2024 • 02:51 PM

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 33அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால், இப்போட்டியில் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். 

Trending

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை இந்த சீசனில் விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.  மேலும் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் சாம் கரண் பஞ்சாப் அணியை வழிநடத்தக்கூடும். பின்வரிசையில் களமிறங்கும் ஷசாங் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரை நம்பியே அணியின் பேட்டிங் உள்ளது. அதேசமயம் டாப் ஆர்டரில் ஜானி பேர்ஸ்டோவ் ஃபார்மின்றி தவிப்பது பலவீனமாக உள்ளது.

அவரைத்தவிர்த்து பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா போன்ற உள்ளூர் வீரர்களும் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இது ஒருபுறம் இருக்க பந்து வீச்சில் சாம் கரன், காகிசோ ரபாடா ஆகியோர் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல் ஆகியோருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து வருவதால், அணியின் பந்துவீச்சு துறையும் சற்று ஏமாற்றததை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: அதர்வா டைடே, ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன் (கே), ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் பெரிதளவில் சோப்பிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதுவரை அந்த அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இந்த சீசனை ஹாட்ரிக் தோல்விகளுடன் தொடங்கிய மும்பை அணி அதன் பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை தோற்கடித்து மீண்டும் கம்பேக் கொடுத்தது. ஆனால் கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மீண்டும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

அந்த அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ரோமாரியோ ஷெஃபெர்ட் என வரிசைக்கட்டி நிற்கின்றனர். மறுபக்கம் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்தடுத்த போட்டிகளில் அபாராமாக பந்துவீசி தொடர்ந்து ரன்களைக் கட்டுப்படுத்தி வருகிறார். அவருக்கு துணையாக ஆகாஷ் மத்வால், ஜெரால்ட் கோட்ஸி, ரோமாரியோ ஷெஃபெர்ட், முகமது நபி போன்ற வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), திலக் வர்மா, டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement